“வயதில் மூத்த பெண்ணை நான் மணந்ததால் உங்களுக்கு என்ன பிரச்சனை?”: மேக்ரான் கேள்வி!

மதச்சார்பின்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்ட இமானுவேல் மேக்ரான், சமீபத்தில் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இமானுவேல் மேக்ரான், தன்னை விட 25 வயது மூத்த தனது ஆசிரியரையே திருமணம் செய்துகொண்டவர். 39 வயதான மேக்ரானுக்கும், 64 வயதான அவரது ஆசிரியருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, பதவியேற்க உள்ள நிலையில், மேக்ரானின் திருமண உறவு குறித்து பல்வேறு விமர்சனங்களையும், வதந்திகளையும் அவரது எதிரிகள் பரப்பி வருகிறார்கள்.

இதனால் எரிச்சல் அடைந்துள்ள மேக்ரான், “மூத்த பெண் ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“என்னைவிட 20 வயது குறைந்த பெண்ணை நான் திருமணம் செய்திருந்தால், அது பற்றி யாரும் ஒரு நிமிடம் கூட சிந்தித்து இருக்க மாட்டார்கள்” என்றும் மேக்ரான் பதிலடி கொடுத்துள்ளார்.

Read previous post:
0
What explains a senior AIADMK minister inaugurating an RSS event?

Ever since the faction wars began in the All India Anna Dravida Munnetra Kazhagam in Tamil Nadu following the death

Close