பிரபுதேவா, பங்காரு அடிகளார் உட்பட தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது

 

“இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள்” என்று மத்திய ஆளுங்கட்சியினர் யாரைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீஜன் பாய்,  மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் மனிபாய், பல்வான்ட் மொரேஹ்வர்,  வெளிநாட்டினர் இஸ்மாயில் ஒமர் குல்லா ஆகிய 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள நடிகர் மோகன்லால்,  கேரளாவை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர், நடன இயக்குனர் பிரபுதேவா, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94  பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Read previous post:
m12
“மக்களுக்கான தரமான படமாக ‘மெஹந்தி சர்க்கஸ்’ இருக்கும்!” – திரையுலக பிரபலங்கள்

கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ராஜு முருகனின் அண்ணனும், அவரது உதவி இயக்குனருமான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ராஜூ முருகனின் கதை வசனத்தில்,

Close