கம்யூனிச சித்தாந்தத்தை தவிர்த்துவிட்டு நல்லக்கண்ணுவை கொண்டாடுவது கயமை!

எளிமை, நேர்மை என இங்கு தங்களை மார்க்கெட் செய்து கொள்ள நல்லக்கண்ணுவை பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்,

நல்லக்கண்ணு எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பதற்கு காரணம் அவர் கொண்ட சித்தாந்தம் கம்யூனிசம் என்பதே. நல்லக்கண்ணுவை போன்ற எளிய கம்யூனிஸ்ட்டுகள் பலரை எங்களுக்கு தெரியும். சொல்லப்போனால் அத்தகையோரை கொண்டதாலேயே அது கம்யூனிச இயக்கமாக இருக்கிறது.

உங்களுக்கு நல்லக்கண்ணுவை மட்டும் தெரிகிறது. அவரை போன்ற பலரை அறிந்திருக்கிறோம். அதனால் அவர்களின் காரணமான கம்யூனிசத்தை கொண்டாடுகிறோம்.

கம்யூனிச சித்தாந்தத்தை மட்டும் தவிர்த்துவிட்டு, நல்லக்கண்ணுவை கொண்டாடுவதெல்லாம் கயமை வேலை. முருகதாஸ்ஸின் அரசியல் நிலை!

ஏதேனும் ஒரு நல்ல விஷயம் தோழர் நல்லக்கண்ணுவுக்கு, அவரது பிறந்தநாளன்று, செய்ய விரும்பினால் அவர் கொண்டுள்ள சித்தாந்தத்தை பற்றி ஒரு வரி எழுதுங்கள். அதை பற்றி ஓர் இரண்டு வரி படிக்கக்கூட செய்யலாம். தப்பே இல்லை. தோழர் நல்லக்கண்ணு உண்மையிலேயே சந்தோஷப்படுவார்.

RAJASANGEETHAN

 

Read previous post:
0a1a
“இந்த கோமாளியை தான் சென்னை உயர் நீதிமன்றம் தலையில் வைத்து கொண்டாடுகிறது!”

பொன் மாணிக்கவேல் சிலைகளை பிடிப்பது எப்படி ? ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல, “ஒரு நல்ல பாம்பு பல வருடங்களாக யாரையுமே கடிக்காமல் அதன் விஷத்தை

Close