சினிமா பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த விஜய் டிவி: மோசடி அம்பலம்!

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி இரவு 1 மணி வரை நீண்டது. “ஆலுமா டோலுமா” பாடலைப் பாடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு ரூ.75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கெனவே திரைப்பட பின்னணி பாடகராக இருப்பவர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். ஒரு சினிமா பாடகரை சூப்பர் சிங்கர் போட்டியில் சேர்த்து அவருக்கு முதலிடமும், பரிசும் வழங்கி மோசடி செய்திருக்கிறது விஜய் டிவி. இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ள விஜயசக்கரவர்த்தியின் பதிவு:-

0a1d

Read previous post:
0a2k
ஆணவக்கொலை முயற்சி அபாயம்: காப்பாற்றப்பட்டார் பிரியங்கா!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரியங்கா - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பஞ்சப்பட்டி அருகே கொடிக்கம்புதூரைச் சேர்ந்த தலித் இளைஞர்

Close