இந்து முன்னணி நிர்வாகி கொலை விவாதம்: “தந்தி டிவியா? தனியார் நீதிமன்றமா?”

இன்று தந்தி டிவியில் விவாத நிகழ்ச்சியின் தலைப்பு – ”இந்து முன்னணி நிர்வாகி கொலை: முன்விரோதமா? மதவாதமா?”

கொலை நடந்திருக்கிறது. காவல்துறை வழக்கு பதிவு செய்து ஆறு பேரை தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரு குற்றவியல் வழக்கின் காரணம் என்ன என்று ஒரு ஊடகம் விவாதிக்கலாமா?

சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வைத்து கொலை வழக்குகளை விசாரிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையிடமா? அல்லது அரசியல் செயல்பாட்டாளர்களின் கருத்துகளை வைத்து விவாதம் நடத்தும் ஊடக நிறுவனத்திடமா?

நான் இந்த நிகழ்ச்சியைக் கட்டாயம் பார்க்கப் போவதில்லை. இருப்பினும், இந்தத் தலைப்பில் நிகழ்ச்சி நடத்துவது சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

– Gopalakrishnan Sankaranarayanan

                                 ****
தந்தி டிவிக்காரர்களே…

நீங்களே ஒரு தனியார் நீதிமன்றம் நடத்தலாமே… அதற்கு தந்தி நீதிமன்றம் என்று பெயர் வைக்கலாம். தீர்ப்பு சொல்லலாம். தண்டனையும் தரலாம். பாண்டே நீதிபதியாய் இருப்பார்.

“ஸ்வாதியைக் கொன்றது இந்துத்துவமா? ஒருதலைக்காதலா?” என்று கூட ஒரு விவாத மன்றம் வைத்திருக்கலாமே? ஏன் விட்டீர்கள்?

 Kavin Malar