தலித் பகைவன் திருமங்கலம் வேட்பாளர்: சீமான் நடவடிக்கை எடுப்பாரா?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க.தமிழ்மணி.

இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட எதிர்பதிவில் “இழிசாதி தலித்தே” என இழிவாகத் திட்டியிருந்தார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது.

20a

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட வேண்டிய ஒரு தலித் பகைவனை, சட்டமன்ற வேட்பாளராக அறிவித்திருப்பது, நாம் தமிழர் கட்சியின் கோட்பாட்டுக்கு உகந்தது தானா? இல்லையெனில், க.தங்கமணி மீது சீமான் கடும் நடவடிக்கை எடுப்பாரா?

சீமான் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், க.தங்கமணியின் வேட்புமனுவை அதே காரணத்துக்காக தேர்தல் அதிகாரி நிராகரிப்பாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்.