தயாரிப்பாளராகும் இன்னொரு இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரைத் தொடர்ந்து ‘ரௌத்திரம்’, ‘களம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி திரைப்பட தயாரிப்பாளர் ஆகிறார்.

ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார் பிரகாஷ் நிக்கி. புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ் நிக்கி இசையமைக்கிறார். நிர்வாக தயாரிப்பு – நமஸ்காரம் சரவணன்.

நடிகர் – நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அடுத்த மாதம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Read previous post:
0a6s
Dhuruvangal Pathinaaru – Official Trailer

Close