தமிழகத்தில் பா.ஜ.க. ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறதாம்! மோடி கூறுகிறார்!!

மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம மந்திரியும் சங்கித்துவவாதியுமான நரேந்திர மோடி

இந்த இ-மெயில் பேட்டியில், “தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள மோடி, “கடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி வைக்காமல் நாங்கள் ஒரு பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இது ஒரு சாதாரண சாதனை அல்ல. எங்களுக்கென்று பாரம்பரியமாக ஆதரவு அளிக்கும் சில பகுதிகள் உண்டு. இப்போது அந்த ஆதரவுத்தளம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயமாக நல்ல வெற்றிகளை காண முடியும் என்று நான் நம்புகிறேன். தமிழக தேர்தல்களில் கடந்த பல பத்தாண்டுகளாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் மிகக் குறைவான தேர்வுகளே இருப்பதால், தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இப்போது மாற்றுத் தேர்வை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

உச்சாணிக் கொம்பில் படுத்துக்கொண்டு பொய்யாய் கற்பனை செய்யவும், பகல் கனவு காணவும் எவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை மோடிக்கு மட்டும் இல்லையா, என்ன…!

Read previous post:
0a1a
“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி

மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம

Close