“தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் இடையூறு செய்கின்றன” என்கிறார் மோடி

மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம மந்திரியும் சங்கித்துவவாதியுமான நரேந்திர மோடி

இந்த இ-மெயில் பேட்டியில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திரும்பத் திரும்ப ‘தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருக்கிறது’ என்றும், ‘அவர்களின் நடவடிக்கைகளும் கவலையளிக்கத் தக்க வகையில் இருக்கிறது’ என்றும் கூறியிருக்கிறார். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள மோடி, “உலகம் முழுவதும் பயங்கரவாத இயக்கங்கள் மனிதகுல மேம்பாட்டையும், வளர்ச்சியையும், நலனையும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமது நாட்டில்கூட மாநிலங்களுக்குத் தேவையான பல வளர்ச்சித் திட்டங்கள், மாநிலம் வளம் பெறுவதற்கான திட்டங்கள் செயலுக்குக் கொண்டுவரப்பட, சில குறிப்பிட்ட நோக்கம் கொண்டவர்களால் இடையூறு செய்யப்படுகின்றன என்பதை சமீபத்தில் நடந்த பல சம்பவங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.

இதில் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்பு இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. இதை நான் அல்ல, எனக்கு முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கே ‘சில வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டிவிடுகிறது’ என்று சரியாகக் கூறியிருக்கிறார். மக்கள் பலனடையும் நல்ல திட்டங்கள் பற்றி வேண்டுமென்றே அப்பாவி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் முயற்சியில் இந்த பயங்கரவாத சக்திகளின் தலையீடு இருப்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மோடிஜி! ஆட்சியதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்ற திமிரில், தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டை நாசம் செய்த – செய்கிற பயங்கரவாதிகள் யார்? அவர்களிடமிருந்து தமிழ்நாட்டு மண்ணையும், மக்களையும் காப்பாற்ற போராட்டங்கள் நடத்தும் போராளிகள் யார்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகவே அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். அதனால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் மன்மோகன் கட்சிக்கு ‘பூஜ்ஜியம்’ மதிப்பெண் கொடுத்தார்கள். வரவிருக்கும் தேர்தலில் உங்கள் கட்சிக்கும் மரண அடி கொடுப்பார்கள்.