“ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?”: பதில் அளிக்க மோடி மறுப்பு

மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஈனத்தனமாக ஜால்ரா போட்டு நக்கிப் பிழைக்கும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு இ-மெயில் மூலம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார் பிரதம மந்திரியும் சங்கித்துவவாதியுமான நரேந்திர மோடி

இந்த இ-மெயில் பேட்டியில், “ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அந்த கட்சியோடு பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள மோடி, “உங்கள் கேள்வியே ‘தொடங்கினால்’ என்று தொடங்குகிறது. சந்தேகமில்லாமல் ரஜினிகாந்தை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால், நிச்சயமாக யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்? பொறுத்திருந்து பார்ப்போம்.