மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இறுதி பட்டியல்: கமல்ஹாசன் வெளியிட்டார்

மக்களவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்ட்து. அந்த பட்டியலில் மத்திய சென்னையில் போட்டியிடும் கமீலா நாசர், தென் சென்னையில் போட்டியிடும் முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா ஆகிய இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இந்நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு நடைபெற்ற பொதுக் கூட்ட்த்தில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை கமல் வெளியிட்டார். இதன்படி, சிவகங்கை தொகுதியில் பாடலாசிரியர் சினேகனும், கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர். ஆனால் கமல், ஸ்ரீப்ரியா போட்டியிடவில்லை.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இறுதி பட்டியல்

சிவகங்கை- சினேகன்

கோவை- மகேந்திரன்

காஞ்சிபுரம் – எம்.தங்கராஜ்

திருவண்ணாமலை – அருள்

ஆரணி – வி.ஷாஜி

கள்ளக்குறிச்சி – கணேஷ்

தென்சென்னை – ரங்கராஜன்

மதுரை – அழகர்

தஞ்சை – ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்

கடலூர் – அண்ணாமலை

தென்காசி – முனீஸ்வரன்

திருப்பூர் – சந்திரகுமார்

பெரம்பலூர் – அருள்பிரகாசம்

நாமக்கல் – ஆர்.தங்கவேலு

ஈரோடு – சரவணக்குமார்

ராமநாதபுரம் – விஜயபாஸ்கர்

கரூர் – ஹரிஹரன்