’கொலையுதிர் காலம்’ படவிழா: நயன்தாரா பற்றி வில்லங்கமாக பேசிய ராதாரவி!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் இயக்குநரே கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

ராதாரவி, இவ்விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நயன்தாரா குறித்து அவர் பேசியுள்ளதாவது:

”எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.

நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்”.

இவ்வாறு ராதாரவி பேசியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியாகி, பலரும் ராதாரவியை சாடி வருகிறார்கள்.

 

Read previous post:
0a1a
மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இறுதி பட்டியல்: கமல்ஹாசன் வெளியிட்டார்

மக்களவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்ட்து. அந்த பட்டியலில் மத்திய சென்னையில் போட்டியிடும்

Close