‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு!

நாங்குநேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தைப் பார்த்தனர்.

இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசுரன்’ படம் மட்டும் அல்ல; பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்.

கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

Read previous post:
0a1a
ஒரு நூறாண்டு பயணம்

ஒரு நூறாண்டு பயணம் விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதிஎனும் தாகத்தில் வழுக்கும் செங்குத்துப் பாறையில் ‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும் மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’ அரூப

Close