விஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்!

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பிகில்’. இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைக் குழு. வருகிற தீபாவளிக்கு 2 தினங்களுக்குமுன், அதாவது அக்டோபர் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இப்படம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி.

’வில்லு’ படத்திற்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இந்தப் படத்தில் நடித்துள்ளார் .

மேலும் விவேக், கதிர், ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, யோகிபாபு, மனோபாலா, எல்.எம்.விஜயன்,  இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ட்ரைலர் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு
படத்தொகுப்பு – ரூபன் எல்.ஆண்டனி
கலை – டி.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி – அனல் அரசு
பாடல்கள் – விவேக்
நிர்வாக தயாரிப்பு – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம்

Read previous post:
0a1a
‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு!

நாங்குநேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முகாமிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள், தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தைப்

Close