“சாய்… என்னடா இப்படி பண்ணிட்ட…?”

சாய்… என்னடா இப்படி பண்ணிட்ட…? உயிர் உனக்கு அத்தனை துச்சமா போச்சா…?

திடீர்னு முழிச்சி மணி பாக்க மொபைல் எடுத்தா, இப்படி ஒரு செய்தி.

இது கனவா நனவானு பதறி, இப்போ கனவா இருந்துடக் கூடாதானு மனசு தவிக்குது.

சாய், உன்னோட mimicry talent, singing, acting, painting  இப்படி எத்தனை திறமைகள்….. அத்தனையும்……. அய்யோ, எனக்கு வார்த்தைகள் கூட வரல.

.வீட்டுக்கு வீடு லூட்டி. ஷூட்டிங்ல நாம ஒர்க் பண்ணப்போ நீ எவ்ளோ குட்டிப் பையன். இப்போ வரை எனக்கு அப்படித்தான்டா தெரிஞ்சிருக்க…..

அக்கா அக்கானு நீ விளையாடி அனுப்பின voice msgs இன்னும் என் மொபைல்ல இருக்கு சாய். நீ எங்கேடா……

தப்பு சாய். நீ இப்படி செஞ்சிருக்க கூடாது…

இதுக்காகவாடா அத்தனை சிரமப்பட்டு இளைச்ச…?

வாழ்க்கை இவ்ளோதானா…?

உன் குழந்தையப் பத்தி ஒரு நொடி நினைச்சிப் பாக்கலயா சாய்?

உன்னை பெத்தவங்களுக்கு அந்த கடவுள் தைரியத்தை குடுக்கணும்.

உன் ஆத்மா சாந்தி அடையட்டும்…….

மிஸ் யூ டா தம்பி.

– ஊர்வம்பு லட்சுமி, நடிகை

                     # # #

மரணம். அதுவாகவே வந்தாலும் ஏற்றுக்கொள்ளாத பாச உறவுகளுக்கு

சாய் பிரஷாந்த், நீ அவர்களுக்கு கொடுத்த கடும் ஆயுள் தண்டனை உன் தற்கொலை.

உன்னை பெற்று வளர்த்து, எங்க சாய்ன்னு ஒவ்வொருத்தர் கிட்டயும் பெருமைப்பட்ட உன் அப்பா சுபாஷ், உன்மேல் தன் உயிரையே வைத்திருக்கும் உன் அம்மா லலிதா சுபாஷ், உன்னை நம்பி, இனி எல்லாம் நீயே என நினைத்த உன் மனைவி, உன் உயிரான உன் செல்லக் குழந்தை இவர்களை நீ அந்த கடைசி நொடிகளில் நினைத்திருந்தால் இந்த கோழைத்தனமான தற்கொலை முடிவை நீ எடுத்திருக்க மாட்டாய்.

நீ சந்தோஷமாக 100 ஆண்டு வாழ வேண்டும் என மனசார வாழ்த்திய நாங்கள், நீ விட்டுச்சென்றவர்களுக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்வோம்.

உன் ஆத்மா சாந்தி அடைய கண்ணீருடன் பிராத்திப்பதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

 எந்த பெற்றோருக்கும்,உற்றார்க்கும் இது போன்ற இழப்பு வரக்கூடாது என இறைவனை வேண்டுகின்றேன்.

 – எஸ்.வி.சேகர், நடிகர்