“ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஆவதை பார்க்கிறேன்”: சிவகார்த்திகேயன் பற்றி சமந்தா!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவான படம் ‘ரெமோ’. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார்.

அக்டோபர் 7ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு பெற்றது. ‘கபாலி’, ‘தெறி’ படங்களைத் தொடர்ந்து வசூலில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது ‘ரெமோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ கைப்பற்றினார். ‘ரெமோ’ தெலுங்குப் பதிப்பு இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்துகொண்டார்.

இவ்விழாவில் சமந்தா பேசும்போது, “நான் நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டாராக ஆவதைப் பார்த்ததே இல்லை. இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன். அதெல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் ரொம்ப எளிமையானவர், நட்பானவர், இனிமையானவர். அதனால் தான் இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கிறேன்.

தில் ராஜூ மற்றும் ஆர்.டி.ராஜா இருவருமே இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ‘ரெமோ’ தெலுங்கு டப்பிங் படம் போன்று எனக்குத் தெரியவில்லை” என்றார் சமந்தா.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருப்பது நினைவுக்கூரத் தக்கது.

Read previous post:
0a
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடியனாக விவேக்!

சந்தானம் நாயகனாக நடித்துவரும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’. அவர் நடித்து முடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள வைபவி ஷாந்தில்யா இந்த படத்திலும்

Close