சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் காமெடியனாக விவேக்!

சந்தானம் நாயகனாக நடித்துவரும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’. அவர் நடித்து முடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள வைபவி ஷாந்தில்யா இந்த படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களோடு ரோபோ சங்கர், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் காமெடியனாக விவேக் நடித்து வருகிறார். காமெடியான நடிக்க ஆரம்பித்து நாயகனாக உயர்ந்திருக்கும் சந்தானம் படத்தில் காமெடியனாக விவேக் நடித்து வருவது திரையுலகினர் பலரை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

புதுமுக இயக்குனர் சேதுராமன் இயக்கும் இப்படத்தை வி.டி.வி. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. 60 சதவிகிதம் படப்பிடிப்பை இங்கேயே நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read previous post:
0a1a
திப்பு துரோகியாம்! மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர், வாஜ்பேயி தியாகிகளாம்!

“ஆம். நான் திப்புவை கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான்

Close