இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் அரசியல் படம் – ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’!

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ‘எம்.ஜி.ஆர்.’ என்ற அரசியல் தலைவரின் பெயரையும், ‘பாண்டியன்’ என்ற ரஜினிகாந்த்தின் திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என்று பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறியது:

இத்திரைப்படம் ‘அமைதிப்படை’க்குப் பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் ஜி ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். நாயகனாக நடிக்கும் இயக்குனர் அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது

கதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்

ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் ‘வட சென்னை’ மற்றும் ‘சந்தனத்தேவன்’ படங்களிலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேனி, மதுரை பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read previous post:
0a1d
துல்கரின் ‘சோலோ’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய ட்ரெண்ட் மியூசிக்!

கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களைத் தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ்

Close