அஜித்தின் ‘விவேகம்’ வீழ்ந்து கொண்டிருக்க இவை தான் காரணங்கள்!

விவேகம்…

விஷால் சட்டப்படி ஐந்து நாட்களுக்குப்பின் என் கருத்து:

எத்தனையோ படங்களுக்கு எழுதவில்லை. அந்த வரிசையில் இந்த படத்தையும் விட்டு விடலாம் என நினைத்தேன். ஆனால், மனசு பொறுக்கலையே ..

உழைத்தவர்கள் ஊதியம் பெற்று அடுத்த வேலைக்கு போயாச்சு. தயாரித்தவர் வியாபாரம் முடிச்சாச்சு. வாங்கிய வியாபாரிகள் சிலருக்கு பாகுபலி; பலர் நிலை மகாபலி . ரசிகர்களுக்கு சற்று தர்ம சங்கடம். வெறியர்களால் பலருக்கு செம்ம சங்கடம் …

இத்தனை அதிர்வுகள் ஏற்படுத்திய விவேகம் படம் வீழ்ந்து கொண்டிருக்க என்ன காரணங்கள் இருக்கலாம் என ஒரு அலசல்…

தமிழுக்கு புதிய, ஆனால் (அநியாயத்துக்கு) அந்நியமான கதைக்களம்.

ஏதோ ஒரு நாட்டில், ஏதேதோ தீவிரவாதிகள், பல நாடுகளில் செயற்கை பூகம்பம் ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள ஒரு அமைப்பு. அதன் முக்கிய தலைகள் விலை போக, தனி மனிதனாக போராடும் ஒரு விலை மதிப்பற்ற தலையாக நாயகன்.

இந்த கதைக்கு திரைக்கதை எழுதும்போது வித்தியாசம், பிரும்மாண்டம், வசனப் பாய்ச்சல் என யோசித்த இயக்குனர், விறுவிறுப்பு எனும் அம்சத்தை மறந்தது ஏனோ?

உடற்பயிற்சி, சண்டைப் பயிற்சி என உழைப்புக்குப் பஞ்சம் வைக்காத அஜீத், கதை கேட்கும் படலத்தில் திரைக்கதை விஷயத்தில் கோட்டை விட்டது ஏனோ?

சிவா, அஜீத் மட்டும் போதும் என நினைத்தது நியாயமா? ஆரம்பத்தில் ஆர்யா, நயன்தாரா… வீரத்தில் விதார்த், சந்தானம், தம்பி ராமையா என பட்டாளம்… என்னை அறிந்தால் அருண் விஜய்… வேதாளம் குத்துப்பாட்டு… என வெற்றிக்கான அலங்காரங்கள் ஏதும் இன்றி அஜீத் மட்டும் போதும் என தீர்மானித்தது நியாயமா?

உலக வியாபாரம் குறித்த பல உண்மைகள் மறைக்கப்படுகிறது என்கிற நிலையில், தமிழ்நாட்டில் fulla கல்லா கட்ட முடியாதபோது, உலகத்தரம் என்கிற பெயரில் அயல் நாட்டில் அதிக செலவு செய்யலாமா தயாரிப்பாளரே…?

இப்படி பல கருத்துகள் இருந்தாலும் இந்த படத்தின் உழைப்பை மதிக்க வேண்டும். எளிதில் வந்திடாது இந்த பிரும்மாண்ட காட்சிகள்.

அதேபோல, உங்களை நம்பி வினியோகஸ்தர்கள் கொட்டிய முதலீட்டையும், ரசிகர்கள் செய்த செலவையும் சம்பந்தப்பட்டவர்கள் மதிக்க வேண்டும்.

“வித்தியாசமாக” என்ற பெயரில் விபரீத செலவு செய்வது விவேகமல்ல. காரணம், நஷ்டப்படுவது, ஆசைப்பட்டு காசை இழப்பது முட்டாள் முதலீட்டாளர்களே தவிர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், தொழிலாளர்களும், நிதியாளர்களும் அல்ல.

எத்தனை பூச்சு பூசினாலும், எகிறி எகிறி குதித்தாலும் சரி… உண்மையை உரக்கச் சொல்கிறேன்… விவேகம் படம் வணிக ரீதியாக பலருக்கு நஷ்டமே.

சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்தால் சரி; இல்லையேல், தமிழ் சினிமாவின் விதி!

VENKAT SUBA

Tamil Film Industry

 

Read previous post:
0a1d
இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் அரசியல் படம் – ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’!

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், ‘எம்.ஜி.ஆர்.’ என்ற அரசியல் தலைவரின் பெயரையும், ‘பாண்டியன்’ என்ற ரஜினிகாந்த்தின் திரைப்பட பெயரையும் இணைத்து, ‘எம்.ஜி.ஆர்.

Close