கமல்ஹாசனும், மீன்குழம்பும், மண்பானையும்!

இஷான் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமரர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமார் மகனுமான துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அவரது மனைவி அபிராமி துஷ்யந்த் தயாரிக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

பிரபு, நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். இது சிவாஜி கணேசன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கமல்ஹாசன் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பியிருக்கும் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜே.லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும், கலையை எம்.பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை எஸ்.ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை ஆர்.எஸ்.சிவாஜியும் கவனிக்கிறார்கள். ஊடகத்தொடர்பு – டைமண்ட் பாபு.

Read previous post:
0b3
நடிகை சாத்வி லிங்கலா – படங்கள்

Close