அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சொல்லும் படம் ’தோழர் வெங்கடேசன்’

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்கும் படம் ’தோழர் வெங்கடேசன்’. அறிமுக  இயக்குனர் மகாசிவன் இயக்கும் இப்பட்த்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள்.

எளிய, நடுத்தர  வர்க்க  குடும்பத்தைச் சேர்ந்த  இளைஞர்  ஒருவருடைய  வாழ்வில்,  ஒரு  விபத்து,  அதோடு  தொடர்புடைய  சட்ட  சிக்கல்கள் எந்தவிதமான தாக்கங்களையும், வலிகளையும்,  வேதனைகளையும், பின்னடைவுகளையும்  ஏற்படுத்துகிறது  என்பதை இப்படம் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது என்றும், அரசு  போக்குவரத்து  துறையில் இருக்கும் அவலங்களை சுட்டிக் காட்டி அதிர்வை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இத்திரைப்பட குழுவினர், காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயானக்  கொள்ளை திருவிழாவில்  நாயகனும்,  நாயகியும்  பங்கேற்ற  காட்சிகளை   பல  கோணங்களில்  ட்ரான் தொழில்நுட்பத்துடன்  காட்சிப்படுத்தியுள்ளனர். திருப்புமுனை கிராபிக்ஸ் காட்சி மோஷன் கண்ட்ரோல் காமிரா உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.

வேதா செல்வம் ஒளிப்பதிவு பொறுப்பை  ஏற்றுகொள்ள, இசை அமைப்பாளராக சகிஷ்னா அறிமுகமாகிறார்.

இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு, ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் மகாசிவன்.

 

Read previous post:
t3
இயக்குனர் சுசீந்திரன் வழங்கும் ’தோழர் வெங்கடேசன்’ திரைப்படத்தில்…

இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்கும் படம் ’தோழர் வெங்கடேசன்’. அறிமுக  இய்க்குனர் மகாசிவன் இயக்கும் இப்பட்த்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள்.இப்படத்தின் ஸ்டில்ஸ்:-

Close