நமது’ படத்தில் நான்கு கதைகள்! ஒன்று சேரும் இடம் கிளைமாக்ஸ்!!

முன்னணி கதாபாத்திரங்களில் மோகன்லால், கவுதமி நடிக்க, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் தமிழ் படத்துக்கு ‘நமது’ எனறு பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் மோகன்லால், கவுதமி ஆகியோருடன் விஸ்வநாத், ஹனிஷா ஆம்ரோஷ், நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கும் சந்திரசேகர் ஏலட்டி கூறுகையில், “ஒரு உலகம் – நான்கு கதைகள் என்கிற தத்துவத்தை இதில் கையாள்கிறோம். சூப்பர் மார்க்கெட்டில் உதவி மேலாளராக வேலை செய்யும் மோகன்லால், குடும்பத் தலைவியாக கவுதமி, 11 வயது சிறுமியாக ரெய்னா ராவ், 24 வயது வாலிபனாக விஸ்வநாத் – இப்படி நால்வரைப் பற்றிய நான்கு கதைகள். இந்த நால்வரும் தனித்தனி கதாபாத்திரங்கள். யாரும் யாருக்கும் அறிமுகமோ, உறவு முறையோ இல்லை. நான்கு பேரின் கதைகளும் ஒன்று சேரும் இடம் தான் படத்தின் கிளைமாக்ஸாக இருக்கும். அருமையான குடும்பக் கதையாக ‘நமது’ உருவாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது” என்றார்.

சாய் ஷிவானி வழங்க, வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் இதை தயாரிக்கிறது.

Read previous post:
0a2f
Kabali Tamil Movie Making – Latest Video

Close