தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’ – இறுதிக்கட்ட படப்பிடிப்பில்!
‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் சி.வி.குமார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’ என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களைத் தயாரித்து வெற்றித் தயாரிப்பாளராக வலம் வருபவர்.
‘அட்டக்கத்தி’ மூலம் இவர் அறிமுகப்படுத்திய இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் இன்று ரஜினிகாந்த்தின் ‘கபாலி’யில் பணியாற்றுவது, இவர் தேர்ந்தெடுப்பவர்களின் திறமைக்கு சிறந்த சான்று.
தனது ஒவ்வொரு படத்திற்குமான திரைக்கதையை சிறப்பாக தேர்ந்தெடுக்கும் தயாரிப்பாளரான சி.வி.குமார், அவரே ஒரு படத்தை இயக்குகிறார் என்றால், அதன் திரைக்கதை எப்படியிருக்கும் என அறியும் ஆவல் அனைவருக்கும் மேலோங்கியுள்ளது.
சந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா திரிபாதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாயவன்’ படத்தை இயக்கி வரும் சி.வி.குமார், தனது இயக்குனர் அனுபவம் பற்றி கூறுகையில், “முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கித் தரச் சொன்னேன். கதையைப் படித்த நலன் குமாரசாமி, கதை நன்றாக இருப்பதாகவும், தான் திரைகதையை எழுதுவதாகவும், என்னை இயக்கும்படியும் கூறினார். எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால், நலன் குமாரசாமி உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தனர்.
அதன் பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. இப்படத்தின் கதாநாயகனாக ‘யாருடா மகேஷ்’ படத்தில் அறிமுகமான சந்தீப் கிஷனும், ‘ப்ரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்த லாவண்யா திரிபாதியும் நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை க்ரைம் த்ரில்லர் பின்னணியில் அமைத்திருக்கிறோம்.
படம் நாங்கள் நினைத்தவாறு சிறப்பாக வந்திருக்கிறது. இதுவரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் படத் துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குனரை வேலை வாங்குவதற்கும், இயக்குனராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது.
இப்படத்தினை நான் இயக்குகிறேன் என கூறியவுடன், தான் தயாரிப்பதாக ஞானவேல்ராஜா முன் வந்தார். அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து எங்கள் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. இத்தருணத்தில் இதுவரை எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஞானவேல்ராஜா மற்றும் அபினேஷ் இளங்கோவன் ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
Artist List :
Hero : Sundeep Kishan ( Kumaran )
Heroine : Lavanya Tripathi ( Athirai )
Villain 1 : Daniel Balaji ( Rudran )
Villain 2 : Jackie Shroff ( Satyan )
Guest Appearance : Akshara Gowda (Vimsha )
Bhagavathi Perumal ( Karuna )
Mime Gopi
J.P ( Jeya Prakash ) – ( Velayudham )
Technician List :
Director : C.V.Kumar
Cinematography : Gopi Amarnath
Music : Gibran
Editing : Leo John Paul
Art Direction : Gopi Anand
Stunt : Vicky
Producer : C.V.Kumar & K.E.Gnanavel Raja
Banner : Thirukumaran Entertainment & Studio Green
PRO: Nikkil