டிக்கெட் விலையில் தள்ளுபடி: ‘பேய காணோம்’ படக்குழுவினர் அதிரடி

குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி.பாரத்.டாக்டர்.R.சுருளிவேல் தயாரிப்பில் மீராமிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் பேயகாணோம்.

இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆன  நிலையில் பேயகாணோம் திரைப்படத்தைப் பார்த்த Hi Creators நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள்.

பேயகாணோம் படம் விரைவில் திரைக்கு வந்து மக்களை மகிழ்ச்சி படுத்தும் எனவும், நல்ல காமெடியான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து மக்களையும்  சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து  60% தள்ளுபடியும்  இரண்டாம் நாள் 40%  தள்ளுபடியும் செய்து டிக்கெட்  வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை வினியோகஸ்தர்களிடமும் , திரையரங்கு உரிமையாளர்களிடமும் Hi Creators  நிறுவனத்தினர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது என் கொடி பறக்கும் நேரம் என்ற பாடலை , செந்தில்கணேஷ் , ராஜலெட்சுமி மற்றும் கெர்ஷோமும் சுடு காட்டுலதான் இருப்பேண்டி நடு சாமத்துல வருவேண்டி என்ற பாடலை வேல்முருகனும் பாடியுள்ளார்கள் இப்படத்தின் பாடல்கள் hi creators யூ  டியூப் சேனலில்  ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது.

0a1f

Read previous post:
0a1e
Varun Dhawan talks about undoing what’s done before with ‘Bhediya’

An actor who has notched up commercial success and critical acclaim in his vibrant career, Varun Dhawan has always loved

Close