ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப்ஹாப் தமிழாவின் “டக்கரு டக்கரு” இசை ஆல்பம் – வீடியோ

பிரபல இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதிய இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். “டக்கரு டக்கரு…” எனத் தொடங்கும் அந்தப் பாடல் ஆல்பமானது 12 நிமிடங்கள் காணொளியாக ஓடுகிறது.

ஒரு குறும்படம் போல தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பாடலில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இருக்கும் சதி குறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பேசுகிறார்கள்.

பாடலின் இறுதியில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி திரையில் தோன்றி, தமிழர்களின் பாரம்பரிய மாட்டினங்களை முற்றாக ஒழிப்பதற்கு, லாபவெறி பிடித்த பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முனைப்பான சதி தான் “ஜல்லிக்கட்டுக்குத் தடை” என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்துகிறார்.

வீடியோ:

Read previous post:
0
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் ‘மாயவன்’ – இறுதிக்கட்ட படப்பிடிப்பில்!

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் சி.வி.குமார். தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘காதலும்

Close