திருப்பதி தேவஸ்தான ஆலோசனை குழு உறுப்பினராக செண்பகமூர்த்தி பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக ஏ.ஜெ.சேகர் ரெட்டி 3-வது முறையாக நியமிக்கப்பட்டார். மேலும், இந்த குழுவில் 4 துணைத் தலைவர்கள், 40 உறுப்பினர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கடந்த மாதம் நியமித்தார்.

அதற்கான உத்தரவு நகலை திருமலை கோயில் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வெளியிட்டார். அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு துணைத் தலைவர்களாக ஆனந்தகுமார், வெங்கடசுப்பிரமணியம், சுதந்திரம், ஸ்ரீ சரண் ஆகியோர் உட்பட 40 உறுப்பினர்கள் நேற்று தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் பதவி ஏற்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி உறுப்பினராக பதவியேற்றார்.

அதற்கான சான்றிதழ்களை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி, உறுப்பினர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

 

Read previous post:
0a1a
கலைப்புலி எஸ்.தாணுவின் ‘ஆளவந்தான்’ 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’ஆளவந்தான்’ திரைப்படம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (08-12-2023) சுமார் ஆயிரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கமல்ஹாசன் இரட்டை

Close