ஜல்லிக்கட்டுக்கு போராடும் இளைஞர்கள் நமக்கு நிறைய கற்று கொடுத்துள்ளார்கள்!

சல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் நமக்கு பல விஷயங்கள் கற்று கொடுத்துள்ளார்கள். அவை

  1. திரையில் தோன்றும் பொய்யான நடிகர்கள் பின்னால் சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
  2. அரசியல் என்று தலைவர்களின் பொய்யான சூளுரைகளை கேட்டது தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
  3. தொலைக்காட்சிகள் நம்மை எதற்காக பயன்படுத்தினர் என்று புரிய வைத்துள்ளனர்.
  4. தமிழனின் பொருள்களை வாங்காமல் அன்னிய நாட்டின் பொருள்களை வாங்கியது எவ்வளவு பெரிய தவறு என்று புரிய வைத்துள்ளனர்.
  5. தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் யார் நமக்காக வந்தார்கள் என்று புரிய வைத்துள்ளர்கள்.
  6. இந்திய நாட்டில் தமிழனின் நிலை என்ன என்று தமிழனுக்கு தெளிவாக புரிய வைத்துள்ளார்கள் .
  7. இன்று ஒரு விஷயத்தை அலட்சியம் செய்தால் அதன் விளைவு பிற்காலத்தில் எப்படி அமையும் என்று புரிய வைத்துள்ளார்கள் .
  8. தமிழன் என்றால் யார், அவனால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைத்தவர்களுக்கு இன்று நாம் யார் என்று புரிய வைத்துள்ளார்கள்.
  9. வளரும் சந்ததியர்களுக்கு நாம் முதலில் என்ன கற்றுத் தர வேண்டும் என்று புரிய வைத்துள்ளனர்.
  10. தமிழ் மொழியினை அலட்சியம் செய்ததன் விளைவு தான் இன்று நாம் சந்திக்கும் இந்த தமிழனின கலாச்சாரத்தினை அழிப்பதற்கான காரணம் என்று புரிய வைத்துள்ளனர்.

நமக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் யார் வந்தார்கள் என்று சிந்தித்துப் பார். அவர்கள் நமக்கு வேண்டுமா? நடிகர்கள் (ஆதரித்தவர்களை தவிர), அரசியல் தலைவர்கள் (ஆதரித்தவர்களை தவிர), அன்னிய நாட்டின் பொருள்கள், நம்மை முட்டாளாக ஆக்கிக் கொண்டிருந்த (news 7 & News 18 தவிர) அனைத்து ஊடகங்கள் என அனைத்தையும் நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை வந்தால் நிச்சயமாக தமிழன் தலை நிமிர்ந்து உலகை ஆள்வான்.

வாழ்க தமிழ்!

பொன் கார்த்திக்

 

Read previous post:
0a1e
Mood on Marina: More than Jallikattu, this is wrath of the underclass

FOR A spontaneous, people-led protest without a visible leadership, need for loudspeakers, or violence that has attracted lakhs of Tamils

Close