“ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் ஆய்வின் லட்சணம் இவ்வளவுதான்!”

ஜல்லிக்கட்டுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது காங்கேயம் காளைகள் அல்ல; புலிக்குளம் காளைகள்.

ஜல்லிக்கட்டுக்கு எந்த காளைகளை பயன்படுத்துகிறார்கள் என்றே தெரியாமல், ஜல்லுக்கட்டுக்கு காங்கேயம் காளைகள் தான் பயன்படுத்துறாங்க என்றும், அது ஒரு சாதி விளையாட்டு என்றும், தலித் விரோதமானது என்றும், பார்ப்பனியத்  தன்மை கொண்டது என்றும்  பத்து பக்கத்துக்கு ஆய்வுக்கு கட்டுரை எழுதுறதுதான், ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் அதிகபட்ச ஆய்வுன்னா, என்ன சொல்றதுன்னு தெரியல..

இந்த ஆய்வ நீங்க ரசியாவுல இருந்தோ, சீனாவுல இருந்தோ செஞ்சிருந்தீங்கன்னாகூட பொறுத்துக்கலாம். தமிழ்நாட்டுக்குள்ள இருந்துகிட்டே இந்த ,மண்ணில் நடக்குற ஒரு பண்பாட்டு நிகழ்வுக்கு எந்த காளைகள் பயன்படுத்துறாங்கன்னே தெரியாம தப்புத்தப்பா ஆய்வு கட்டுரை எழுதுறீங்கன்னா, தெரிஞ்சுக்கிடுங்க இந்த லெட்சணத்துலதான் இருக்கும் சாதி பற்றிய உங்க ஆய்வும், சாதி ஒழிப்பு குறித்த யுக்திகளும்.

தப்பா நெனச்சுகிறாதீங்க, இதுதான் உண்மை.

அப்புறம், “ஜல்லிக்கட்டு காளைகளை ஜமீன்தார்களும், பண்ணையார்களும் தான் வைத்திருப்பார்கள்” என்பது போன்ற கற்பனையான வர்ணனைகள். இன்னுமா ஜமீன்தாரி முறையிலேயே இருக்கீங்க? ஜமீன்தார்கள், பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள், காளைகளை செல்வமாகக் கருதி ஆதிக்கம் செலுத்திய காலமெல்லாம் மலையேறிப் போச்சுங்க.

அவங்கள்லாம் பிள்ளைகளை அமெரிக்கா – லண்டனுக்கு அனுப்பிவிட்டு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடியேறி புதிய பொருளாதார வாய்ப்புகளுக்குள் கால் ஊன்றிக்கொண்டார்கள் எப்போதோ.

இப்போ வந்து பாருங்கள், அவர்கள் விட்டுச்சென்ற கிராமங்களில் காரை பெயர்ந்த ஒட்டு கூடங்களில், முழுதாக பூசாத செங்கல் வீடுகளில், குடிசைகளில், பிழைக்க வழியில்லாமல் இருப்பவர்கள்தான் காளைகளை வளர்க்கிறார்கள். அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய நிலத்தில், புதர் மண்டிய தரிசு காடுகளில் அத்துணை நெருக்கடிகளுக்குள் அவர்கள் காளை வளர்க்கும் பிடிவாதத்தை நேரில் பார்க்காமல் உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது.

நகரமயமாதலுக்குள் ஓடிச்சேர்ந்து பிழைத்து தழைத்த மேட்டுக்கு குடிகள், சொந்த ஊர்களில் கழிந்துவிட்டுப்போன ஆயை போல சாதி ஆதிக்கக் கூறுகளும் இருக்கத்தான் செய்கிறது. நசுங்கிக்கொண்டிருக்கும் விவசாய குடிகள் அதை பெருமையாக பூசித்தான் திரிகிறார்கள். சாதி பெருமைக்கு பூசுற சந்தானம் இல்லை ஆயின்னு இயக்கங்கள்தான் அரசியல்படுத்தணும்.

அதுக்கு முதலில் அவர்களிடம் போய் வேலை செய்ய வேண்டும்.

அவர்களிடம் போக வேண்டுமென்றால், அவர்களின் உரிமைகளுக்கு நிற்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு அப்படி அவர்களின் ஒரு உரிமையாகத் தான் இருக்கிறது.

அவர்களின் உரிமையில் இருக்கும் கேடுகளை விமர்சனப்படுத்துவது என்பது வேறு; அதையே காரணம் காட்டி மறுப்பது  என்பது வேறு….!

ANBE SELVA