உலகை அரசாங்கத்தின் “கண்களால்” பார்ப்பவர்கள்!

டிமானிடைசேஷன் அல்லது ரீமானிடைசேஷன் குறித்து வாசித்த கட்டுரைகளில் மிக முக்கியமான ஒன்றென இதை கருதுகிறேன்.

இதை தமிழில் மொழிபெயர்த்தால் விரிவான பயன்பாட்டுக்கு உதவும். அதன் அடிப்படைகளிலேயே மிக விவகாரமான புள்ளிகளை தொட்டு மிகத் தெளிவாக பதிலிறுத்திருக்கிறார் கட்டுரையாளர்.

அதன் துவக்கக் கேள்வியே முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடிய ஒன்று. ஆம். “ஊழல், லஞ்ச லாவண்யத்துக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் ஏன் வலதுசாரி அரசியலையே வலுவாக்குகிறது” என்ற துவக்கமே விவகாரமாய் இல்லையா?  ஊழலும், லஞ்சமும் வெகுமக்களுக்கு எதிரானவை இல்லையா?

அந்தக் கேள்விக்கு முன் கட்டுரை களநிலவரத்தை பேசுகிறது. இந்த நடவடிக்கை துவங்கியதும் பெரும்பாலானவர்கள் அதனை ஆதரிக்கவே செய்தனர். அதன் செயல்பாட்டில், வழிமுறைகளில் குறை கண்டவர்களும் அதன் நோக்கத்தை சந்தேகிக்கவில்லை.

இப்போது ஓரளவிற்கு இது பொருளாதாரத்தைச் சீர்குலைக்கப் போகிறது என்பதை பலர் நம்பினாலும், மோடிக்கு, கறுப்புப் பணத்துக்கெதிரான அவரது நட்வடிக்கைகளுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்றே எண்ணுகின்றனர். மோடிக்கு எதிரான எதிர்வாதங்களை ஏற்க மறுக்கிறார்கள்.

இது ஏனென்றால் அவர்கள் இந்த உலகை அரசாங்கத்தின் “கண்களால்” பார்க்கிறார்கள். அதாவது ‘ நிர்வகிக்கப்படும் அரசாங்க’த்திற்கும்,’ ‘இறையாண்மை கொண்ட குடியரசு’க்குமான வேறுபாட்டை மக்கள் காணத் தவறுகிறார்கள்.

இரண்டும் வேறு வேறு என்ற பிரிவை ஆட்சியாளர்கள், குறிப்பாக தேசியத்தின் பெயரால் வரிந்துகட்டும் வலதுசாரி ஆட்சியாளர்கள் இந்த வேறுபாட்டை அழித்தபடியே இருக்கிறார்கள். தேச நலனும் அவர்களது ஆட்சியும் எல்லா நிலையிலும் இயைந்து செயல்படுவதான பாவனையை உருவாக்குகின்றனர்..

கறுப்புப் பணம் என்ற பதமே ‘அரசு / வரி வருவாய்‘ ஆகிய தளங்களுக்கு வெளியே அர்த்தமற்றது என்பது புரிபடுவதில்லை. கறுப்புப் பணம் என்பதே ‘நிர்வகிக்கும் அரசின் வரி விதிப்பு எல்லைக்கு வெளியே இயங்குவது‘ என்பது தான் அடிப்படை. ஆனால் அது தேசத்தின் பொருளாதாரத்திற்கு உள்ளேயே இருப்பதுதான்.

ஆனால் இன்று இந்திய தேசத்தின் ஒரே கேடு கறுப்புப் பணம் மட்டுமே என்ற வாதம் ஆட்சியாளர்களால் முதன்மையானதாக ஆக்கப்பட்டு விட்டது.

 (முழுதாக அவகாசம் கிடைக்கும்போது மொழிபெயர்க்கலாம்.)

 Subaguna Rajan