“தமிழர்களை அழிக்க தமிழகத்தில் துணை ராணுவ படை: எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!”

சத்தீஸ்கர் மாநிலத்தில் 13 வயது ஆதிவாசி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சித்ரவதை செய்து, துப்பாக்கியில் இருக்கும் கத்தியைக் கொண்டு குத்தி கொன்றிருக்கிறது இந்திய துணை ராணுவம். அச்சிறுவனை கொன்ற பின்னர், நக்சலைட்டினுடைய சீருடையை மாட்டி புகைப்படம் எடுத்திருக்கின்றனர். இதை ராணுவ அதிகாரி நீதிமன்றத்தில், “வெற்றிகரமான மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கை” என்று பதிவு செய்திருக்கிறார்.

தமிழகத்தில் துணை ராணுவத்தை கொண்டு வருவதை ஏன் எதிர்க்கிறோம் என கேட்கும் அப்பாவிகளுக்காக இப்பதிவு. ராணுவம் நுழைந்த எந்தப் பகுதியிலும் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்புடன் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. பெற்றோர்கள் முன்னால் குழந்தைகள் கொல்லப்படுவதும், குழந்தைகள் முன்னால் அம்மாக்கள் பாலியல் வன்முறை செய்யப்படுவதும், அப்பாக்கள் கொலை செய்யப்படுவதும் வரலாறு.

தமிழகத்தில் துணை ராணுவப் படையைக் கொண்டு தமிழர்களை அழிக்க துடிக்கும் இந்திய அரசிற்கு எதிராக குரல் எழுப்புவது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

ராணுவமும், காவல்துறையும் இல்லாத நகரத்தில் – கிராமத்தில் நாம் வளர்ந்தோம். அதே சுதந்திரத்தை நமது குழந்தைகளுக்கும் உருவாக்கிக் கொடுப்பது தானே பொறுப்புள்ள பெற்றோரின் கடமை? அதை செய்ய மறுத்தால், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நாமே அழிப்பதாகி விடாதா? சிந்திப்பீர்.

கடந்த 7 ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். “எல்லையோர மாநிலமான தமிழகத்தை ராணுவமயமாக்காமல் இந்திய அரசு இருக்காது” என்று சொன்னோம். “பிற எல்லையோர மாநிலங்களைப் போல தமிழகமும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும்” என்றோம். இப்போது ஆரம்பித்திருக்கிறது அட்டூழியங்கள்.

எதிர்குரல் கொடுங்கள். எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள்.

இங்கிருக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சியை நம்பிப் பயனில்லை.

Thanks Thiru.

(Shared from Anbe Selva)