“பகிரங்க  மன்னிப்பு கேள்”: பீட்டாவுக்கு நடிகர் சூர்யா நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நடிகர் சூர்யா தொடர்ந்து ஆதரித்து வருகிறார். சென்னை மெரினா கடற்கரைக்கு நேரில் சென்று, இக்கோரிக்கைக்காக அங்கு நடைபெறும் போராட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில், பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், சூர்யா தன்னுடைய பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தருகிறார் என்று கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த சூர்யா, பீட்டா நிர்வாகி நிகுஞ்ச் சர்மா தன்னுடைய பேச்சுக்காக ஒரு வாரத்துக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, தனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.