விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள ”அனபெல் சேதுபதி”: பத்திரிகையாளர் சந்திப்பு

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், G. ஜெயராம் தயாரிக்க, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் பிரமாண்டமான காமெடி திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்தப்படத்தை,  இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு, யோகி பாபு, மதுமிதா, ராஜ சுந்தரம், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன், ராஜ்குமார், சுனில், சுரேகா வாணி, லிங்கா, ஹர்ஷதா, இந்து ரவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் உத்ரா , யுவனேஷ், அஷ்வின் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர்.

0a1r

உலகமெங்கும் செப்டம்பர் 17 அன்று  வெளியாகவுள்ள இப்படத்தின் முன்னோட்டமாக, இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய,  தீபக் சுந்தர்ராஜன்  இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசியவை:

இயக்குநர் R சுந்தர்ராஜன்:

நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிகையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிகையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த படத்தின் கதை தெரியாது. படம் பற்றி எதுவும் தெரியாது,  அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார். சந்தோஷமாக இருந்தது. இங்கு வந்து பாடல்கள், ட்ரெய்லர் பார்த்தபோது, அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல்,  தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன்:

தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி  நடித்த அனைவருக்கும் நன்றி. இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு ஃபேண்டஸி காமெடி படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள்.  அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் இயக்கத்தை நான் இயக்குநர் AL விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை, தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன்.

தொழில் நுட்ப கலைஞர்கள் :

கௌதம் ஜார்ஜ் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), கிருஷ்ணா கிஷோர் ( இசை ), வினோத் ராஜ்குமார் N  (கலை), பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பாளர்), தினேஷ் (நடனம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்), N  உதய் குமார் (ஒலி கலவை ) Sync Cinemas ( ஒலி அமைப்பு )  R மணிகண்டன் (VFX Supervisor), சந்தோஷ் (ஸ்டில்ஸ்), Tuney John 24 AM (விளம்பர வடிவமைப்பு), K சக்திவேல் (புரடக்சன் எக்ஸியூட்டிவ்), A குமார் (எக்ஸியூட்டிவ் புரடியூசர்),சுரேஷ் சந்திரா, ரேகா  D’One (மக்கள் தொடர்பு).