‘குற்றமே தண்டனை’யில் வில்லி – ஐஸ்வர்யா ராஜேஷ்!

ரசிகர்களின் அமோக வரவேற்பையும், விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டையும், ஏராளமான விருதுகளையும் வாரிக் குவித்த ‘காக்கா முட்டை’ படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கியுள்ள படம் ‘குற்றமே தண்டனை’.

விதார்த் முதன்மை கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா திவாரியா, நாசர், ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் எதிர்மறை நாயகியாக – வில்லியாக – நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘காக்கா முட்டை’ போல இந்த படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையரங்க வெளியீட்டுக்கு சரியான தேதிக்காக காத்திருந்தார்கள். தற்போது தணிக்கைப் பணிகளும் முடிவுற்று இருப்பதால் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்துக்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

Read previous post:
0a1o
தனுஷின் ‘வடசென்னை’யில் மீனவப்பெண் – அமலா பால்!

விருதுகள் குவித்த 'விசாரணை' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வடசென்னை'. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

Close