பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் சிம்ரன்!

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. சாந்தனு, பார்வதி நாயர், பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் இதில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார் சிம்ரன். இது குறித்து சிம்ரன் கூறுகையில், “இப்படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் வழக்கமாக நீங்கள் பார்க்கும் கதாபாத்திரமாக இருக்காது. இப்போதைக்கு என் பாத்திர படைப்புக் குறித்து வேறு எதுவும் கூற இயலாது” என்றார்.

கடந்த 2 ஆண்டுகளில் ‘ஆஹா கல்யாணம்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘கரையோரம்’ ஆகிய படங்களில் மட்டுமே கெளரவ தோற்றத்தில் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read previous post:
0a1
“சிவகார்த்திகேயனின் செவிலியர் வேடத்துக்கு ஆடை வடிவமைப்பது சவாலாக இருந்தது!”

பண்டிகை காலங்கள் நெருங்கி வந்துகொண்டிருக்க, புதுரக ஆடைகளும், அலங்கார அணிகலன்களும் கடை வீதியில் குவிந்த வண்ணம் இருக்கிறது. அவற்றுள் அதிகமாக இளைஞர்களால் தேடப்படுவது, ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன்

Close