‘இமைக்கா நொடிகள்’: அதர்வாவுக்கு ஜோடி ராஷி கண்ணா!

‘டிமான்ட்டி காலனி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

நயன்தாரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் அத்ர்வாவுக்கு ஜோடி கிடையாது. தெலுங்குப்படங்களில் நடித்துவரும் ராஷி கண்ணா, அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்துக்காக இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. பேச்சுவார்த்தை விரைவில் இறுதிசெய்யப்பட்டு, அவர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறது.

ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர், இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஆதி, படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணியாற்ற இருக்கிறார்கள்.