ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்துள்ள கவுரவம்!

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக இருக்கிறார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான், இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு ‘ரெமோ’ படத்துக்கு மிகுந்த பொருட்செலவு செய்து,மிகப் பெரிய பட்ஜெட்டில் ப்படத்தை எடுக்க 24AM ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ஜோடியான கீர்த்தி சுரேஷ், மீண்டும்  ஜோடியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை ‘மெட்ராஸ் மூவிஸ்’ எனும்  நிறுவனம் பெற்றுள்ளது. ரஜினி படங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தமிழ் நடிகர்களின் படங்களும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் முதன்முறையாக, ரஜினிக்கு படங்களுக்கு அடுத்து நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவில் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ படம் வெளியாகிறது.

ரஜினி படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படமே இந்த ஏரியாவில் வெளியிடப்படுவதால், ரஜினிக்கு பிறகு ஜப்பான் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கௌரவம் வழங்கியுள்ளதாக ‘ரெமோ’ படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது..

Read previous post:
0a
‘இமைக்கா நொடிகள்’: அதர்வாவுக்கு ஜோடி ராஷி கண்ணா!

'டிமான்ட்டி காலனி' வெற்றிப்படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’ அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார். நயன்தாரா இப்படத்தில்

Close