போட்டி தொடர்கிறது: நேற்று கமல் – கேஜ்ரிவால் சந்திப்பு! இன்று மோடிக்கு ரஜினி ஆதரவு!

அரசியலில் குதித்து, தமிழக முதல்வர் ஆகும் விருப்பத்தில் இருக்கும் ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே வெளியில் தெரியாத ஒரு மறைமுக போட்டி நிலவி வருகிறது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கமல்ஹாசனை நேற்று சந்தித்துள்ள நிலையில், இன்று ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். தூய்மையே தெய்வீகம்” என்று கூறியுள்ளார்.

“பிள்ளை இல்லாத வீட்டில் கிழவர்கள் துள்ளி விளையாடினார்களாம்” என்ற சொலவடைக்கும், மேற்கண்ட செய்திக்கும் எந்த தொடர்பும் இல்லை!

 

Read previous post:
0a1e
“கமல், கேஜ்ரிவால் பரந்துபட்ட புரிதல் இல்லாதவர்கள்”: உதயகுமார் தாக்கு!

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் முதலில் சேர்ந்து, பின்னர் அதிலிருந்து விலகிவிட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் கமல்ஹாசன்,

Close