“கமல், கேஜ்ரிவால் பரந்துபட்ட புரிதல் இல்லாதவர்கள்”: உதயகுமார் தாக்கு!

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் முதலில் சேர்ந்து, பின்னர் அதிலிருந்து விலகிவிட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. ஆனால், சினிமா துறையில் இருந்துகொண்டே குறுக்கு வழியில் அதிகாரத்துக்கு வர நினைப்பதை ஏற்க முடியாது. இவர்கள் நடிப்பதை கைவிட்டுவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்துப்பேசி, அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும்.

இந்தியாவில் ஊழலை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியாது. ஆம் ஆத்மி கட்சி கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அரவி ந்த் கேஜ்ரிவாலுக்கு பரந்துபட்ட புரிதல் இல்லை. அவர் அதே போன்ற பரந்துபட்ட புரிதல் இல்லாத கமல்ஹாசனை சந்திக்கிறார். இவர்களது சந்திப்பால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை.

கமல்ஹாசனை நம்பி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

இவ்வாறு உதயகுமார் கூறினார்.