மீண்டும் திரைக்கு வருகிறது ஹரிகுமாரின் ‘காதல் அகதீ’!

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம்.ராமய்யா தயாரித்துள்ள படம் ‘காதல் அகதீ’. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்துள்ளார். ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளாக ஆயிஷா, மமதா ராவத் ஆகியோர் நடித்துள்ளார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, லொள்ளுசபா மனோகர், பிளாக் பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி பாபு, ஷாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஷாமி திருமலை. அவர் இப்படம் பற்றி கூறுகையில், “இந்த படம் சில நாட்களுக்கு முன் சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அந்த நேரத்தில் சரியான திரையரங்குகள் அமையததாலும், கால சூழ்நிலை சரியாக அமையாததாலும், திரையிடப்பட்ட தியேட்டர்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. தற்பொழுது சுமார் 100க்கும் மேற்பட்ட நல்ல திரையரங்குகளில் மறுவெளியீடு செய்கிறோம்.

“ஹரிகுமார் இந்த படத்தில் சத்யா என்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரே கதாபாத்திரம் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஹரிகுமாரின் வித்தியாசமான வில்லன் வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” என்றார்.

ஒளிப்பதிவு – ஷியாம்ராஜ்

இசை – பர்ஹான் ரோஷன்

பாடல்கள் – விவேகா

கலை – பத்மநாபன்

ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா

நடனம் – ராதிகா

தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக்ரெட்டி

 ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி