“தலித்தாக நடிக்கும் துணிச்சல் தமிழகத்தில் ரஜினிக்கு மட்டும் தான் இருக்கிறது!”

‘காலா’ படத்தை தலித் படமாக பார்க்க தொடங்கிவிட்டனர். “ரஞ்சித்தை காலி பண்ணாமல் விடமாட்டார்கள்” என்று சிலர் அக்கறையாக சொல்லுவது போன்று கிண்டல் அடிக்கின்றனர்.

ஏற்கனவே ரஞ்சித் எடுத்த 3 படமும் தலித் படம்தான். எல்லா படமும் ஹிட்டு தான்.

இப்போது தான் தலித்துகளுக்கான அரசியல்,கலை,சினிமா என்று வளர தொடங்கி இருக்கிறது.அது பிடிக்காமல், அதே நேரத்தில் எங்கே வெளிப்படையாக விமர்சனம் செய்தால் தன் சாதி கொண்டை வெளியே தெரிந்து விடுமோ என்கிற பயத்தினால் என்னமா அரசியல் பண்றீங்க?

தலித் இளைஞர்கள் கொண்டாடிவிட்டு போகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்னை?

“எங்களுக்கு ரஞ்சித் தான் பிடிக்கும். ரஜினியை அல்ல” என்கின்றனர். இப்படி சொல்வதன் மூலம் நாம் நம்பிவிடுவோமா இவர்கள் தலித்துகள் விசுவாசிகள் என்று.

ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு அருமையான கலைஞர்கள் சேர்ந்து எடுக்கும் படைப்பு அது. அடுத்து, இது சினிமா. அரசியல் அல்ல. இதில் ஏன் ரஜினியின் அரசியல் கருத்துக்களை இணைத்துப் பேச வேண்டும்?

தலித்தாக நடிக்க இதுவரை எந்த கலைஞனுக்கும் தமிழ்நாட்டில் துணிச்சல் இல்லை. ரஜினிக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. பாராட்டுவோம்.

ஆகவே சொல்லுகிறேன். இது தலித்துகளின் காலம். முரட்டுக்காளைக்கும், கருப்பு காலாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அது சாதிக்கும் சேரிக்கும் உள்ள வித்தியாசம்.

எவிடென்ஸ் கதிர்