தடையில்லா சல்லிக்கட்டுக்கு மோடி அரசு செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!

3 ஆண்டுகளாய் வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்யாத பீட்டாவை தடை செய்து, பீட்டா நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைப்பது சுலபமான வேலை.

மேலும், வெளிநாட்டில் தலைமையகம் வைத்துள்ள ஸ்தாபனங்கள், இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி இந்திய நீதீமன்றங்களில் வழக்கு தொடுத்து பரிகாரம் கேட்க உரிமை இல்லை என்று சொசைட்டி பதிவு சட்டத்தைத் திருத்த வேண்டும்.

அரசின் இந்திய மிருகநல வாரியத்தை உடனடியாக கலைக்க வேண்டும்

காமக் கொடூரன் வருண் காந்தியின் தாய் மேனகா காந்தியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

இந்தியப் பாராம்பரியத்தை மதிப்பவர்களான இந்தியர்களை மட்டுமே இந்திய மிருகநல வாரிய உறுப்பினர்களாக நியமித்து, இந்திய மிருகநல வாரியத்தைத் திருத்தி அமைக்க வேண்டும்.

மிருக வதை தடுப்பு சட்டத்தில் இருந்து – காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத காட்டு விலங்குகள் லிஸ்டில் இருந்து – நீக்க வேண்டும்.

அப்படி திருத்தப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்துவிட வேண்டும்.

அப்புறம் உச்சநீதீமன்றம் அல்ல… யாராலும் ஜல்லிக்கட்டுக்கு ஒருபோதும் தடை விதிக்க முடியாது.

GNANABHARATHI CHINNASAMY

Advocate