“ஜோக்கர்’ கொடுக்கும் சாட்டை அடிகள்!” – திரை பார்வை

நீண்ட நாட்களுக்குப்பின் நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்து உடனே என் கருத்துகளை சொல்ல ஆசைப்பட்ட படம் ‘ஜோக்கர்’.

முதலில் சொல்ல வேண்டிய விஷயம், hats off …

விரிவாக சொல்ல வேண்டிய விஷயம், why this film is toe appreciated …

  1. நடிப்பு என்பது அழகு, நிறம் சம்பந்தப்பட்டது அல்ல என ஓங்கி சொன்னதால்…
  2. திரைப்படம் என்பது பொழுதுபோக்குதான்; ஆனாலும் உருப்படியாக பொழுது போக்க என தைரியமாக சொன்னதால்…..
  3. அரசியல், அதிகாரம், மதம், சினிமா கவர்ச்சி, மதுப்பழக்கம், பண ஆசை, தனிமனித ஒழுக்கமின்மை, சமூக அக்கறை இன்மை, சுயநல சிந்தனை, பொதுநலம் குறித்த அக்கறை இன்மை மற்றும் பொது அறிவு என்பதே இல்லாத நிலை என நிலவும் சமூக சூழல்கள் அனைத்தையும் ஒரே படத்தில் சாட்டை அடிகளாக திரையில் இருந்து பார்வையாளர்களை நோக்கி அடித்திருக்கும் நேர்த்தி…
  4. இசையிலும், ஒளிப்பதிவிலும் உள்ள நிஜம்…
  5. வசனங்களில் உள்ள வளம் நிறை கனல்…
  6. தயாரிப்பாளர்களின் துணிச்சல்…
  7. பத்திரிகையாளனாக இருந்தபோது இருந்த கோபம் குறையாமலே இயக்குனராக மாறி உள்ள ராஜுமுருகனின் கதை அமைப்பு…

இப்படி இன்னமும்கூட சொல்ல வேண்டிய சில அம்சங்கள் உண்டு.

இருப்பினும், திரைப்படம் என்பது இரண்டு மணி நேரம் பார்வையாளனை கட்டிப்போட்டு, திரையில் உள்ள காட்சிகளோடு ஒன்ற வைக்க வேண்டிய வித்தை. குழந்தைக்கு பால் கொடுக்கும் போதுகூட பரவாயில்லை, மருந்து கொடுக்கும்போது தாய்க்கு அதிக கவனம் அவசியம். குழந்தைக்கு புரை ஏறிவிட்டால் மருந்து வெளியே வந்து விடும். இப்படத்தில் அந்த ஆபத்து நிகழ வாய்ப்பு உண்டு.

அதிக உணவும் விஷம்; அதிக மருந்தும் விஷம். அளவுதான் முக்கியம்.

ஜோக்கர் மாபெரும் வணிக ரீதியிலான வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ் சினிமா அர்த்தமுள்ளதாக இருக்கும்.

வெற்றிச்செய்திக்காக காத்திருக்கிறேன்.

– வெங்கட் சுபா

திரைத்துறை

Read previous post:
0a5n
ஜோக்கர் – விமர்சனம்

அரசியல் அதிகாரங்களின் அக்கிரமங்களில் சிக்கி அல்லலுறும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை இப்படித்தான் சொல்ல முடியும் என்று ‘ஜோக்கர்’ படத்தின் வழியாக நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜூ முருகன். கக்கூஸ்

Close