“ஜெயமோகனை போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதே இல்லை!”

ஜெயமோகனைப் போன்ற ஒரு அறிவிலியை நான் கேள்விப்பட்டதேயில்லை. தலை முத்திப் போன ஒரு நபர் இப்படித்தான் உளறுவார்.

ஒரு மத-சாதிய-இன-பால்-வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமூகத்தில் கருத்துப் போராட்டம்-மாறுபாடு என்பது இரு தனிநபர்களுக்கு இடையிலானது அல்ல. கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதர்களுக்கு இடையிலானது.

இதனைப் புரிந்து கொள்ளாது பிரச்சினையை நபர்களுக்கு இடையிலானதாகச் சித்தரிப்பது தந்திரசாலியின் வேலை.

இட்லருக்கு-மோடிக்கு எதிராகப் பேசுபவன், தனிநபர் எனும் அளவில் அவர்களுக்கு எதிரியாகவா தன்னை நிறுத்திக் கொள்கிறான்?

ஜெயமோகன் இந்திய வலதுசாரிகளின் கலாச்சாரக் காவலன். சதா சாவர்க்கரையும், மோடியையும், கலாச்சார பாசிசத்தையும் விமர்சிப்பவன், ஜெயமோகனையும் விமர்சிப்பான். இதனை தனிநபர் விரோதமாகச் சித்தரிப்பவர் எதிர் கருத்துக்களை எதிர்கொள்ளும் தர்க்க வலுவற்றவர் அல்லது மிக மோசமான தந்திரோபாயவாதி.

 ஜெயமோகனையும் மோடியையும் இட்லரையும் அறிந்தவருக்கு இவர் எத்கையவர் என்பது தெரியும்.

 ஜெயமோகனைத் தொடர்ந்து விமர்சிப்பது கலாச்சார பாசிசத்தை முதல் எதிரியாகக் கருதுகிற என் போன்றவர்க்கு இடையறாத பணிகளில் ஒன்று.

 – Yamuna Rajendran