18 மணி நேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்கள்: ‘புரியாத புதிர்’ ட்ரெய்லர் சாதனை! 

சுவாரசியமான திருப்பங்களும், எதிர்பாராத திருப்புமுனைகளும் அமைந்த கதைகளத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். சமீபத்தில் வெளியான  விஜய் சேதுபதி – காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லரே அதற்கு சிறந்த உதாரணம்.

‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை  ‘ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே.சதீஷ்குமார்.

திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த   ‘புரியாத புதிர்’ படத்தின் விறுவிறுப்பான  ட்ரெய்லர் நேற்று முன்தினம் (அக்டோபர் 29ஆம் தேதி) வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட பதினெட்டு  மணி நேரத்திலேயே ஆறு லட்சம் பார்வையாளர்களை இந்த டிரைலர்  பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

“தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் ‘மாஸ் ஹீரோ அந்தஸ்து’,   இந்த ‘புரியாத புதிர்’ ட்ரெய்லரின் வெற்றிக்கு  பக்கபலமாய் அமைந்திருக்கிறது  என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். அதுமட்டுமின்றி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்ற விஜய் சேதுபதி – காயத்ரி கூட்டணி, மீண்டும் இந்த படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலம்.  ‘புரியாத புதிர்’ ஆக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி எடுத்திருக்கும்  இந்த திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியாக பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஜே.சதீஷ்குமார்.