தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி சமந்தா!

‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சமந்தா.

ஜாக்கி ஷெராஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’.  யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தை எஸ்.பி.சரண் தயாரித்திருந்தார்.

சிறந்த புதுமுக இயக்குநர் மற்றும் சிறந்த எடிட்டிங் என இரண்டு தேசிய விருதுகளை இப்படம் வென்றது. மேலும், விமர்சன ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, புதிய படம் ஒன்றை இயக்குகிறார் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தின் நாயகர்களாக விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. விரைவில் இருவருமே ஒப்பந்தமாவார்கள் என தெரிகிறது. இப்படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தற்போது இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

நீண்ட நாட்கள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கவிருக்கும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read previous post:
p7
18 மணி நேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்கள்: ‘புரியாத புதிர்’ ட்ரெய்லர் சாதனை! 

சுவாரசியமான திருப்பங்களும், எதிர்பாராத திருப்புமுனைகளும் அமைந்த கதைகளத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். சமீபத்தில் வெளியான  விஜய் சேதுபதி - காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில்

Close