“தொப்பை வளர்வதை ஞானம் வளர்வதாக நினைத்த குற்றவாளிகள்!”
“கம்ப்யூட்டர் தயாரிக்கும் முறை பற்றி வேதங்களிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலைநாடு அதைத் திருடி கம்ப்யூட்டரைத் தயாரித்து பயன்படுத்திவிட்டது. வேதங்களை நாம் சரியாகப் படிக்காததால்தான் கம்ப்யூட்டர் துறையில் அமெரிக்கர்களை எஜமானர்களாக விட்டுவிட்டு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் காப்பிரைட் கையில் வைத்துள்ள இந்தியர்களான நாம், அவர்களிடம் சேவகம் புரியும் வேலையாட்களாக பணிபுரிகிறோம்”என்று #பூரி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
இது பிரமாண்டமான ஜோக் அல்ல என்றும், உண்மையே என்றும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். சூத்திரர்களான நாங்கள் “வேதங்களைப் படிக்கக் கூடாது” என்று நீங்கள் தடை விதித்து இருக்கிறீர்கள். (வேறு எந்த மதமும் அவர்களது புனித நூல்களை அந்த மதத்தைச் சாராதவர்க்ள் படிக்கக் கூடாது என்று தடை விதிக்கவில்லை என்பது ஒரு முக்கியமான உண்மை.) வேதங்களைப் படிக்கும் ஏகபோக உரிமை பெற்ற நீங்கள் அல்லவா வேதங்களில் இருந்து அதைப் படித்து நாட்டுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.
வேதங்களைப் படித்து விளக்கம் சொல்லியிருக்க வேண்டிய நீங்கள், உங்கள் தொப்பை வளர்வதை ஞானம் வளர்வதாக நினைத்துக்கொண்டு, வேதங்களை முறையாகப் படிக்காமல், கம்ப்யூட்டர் ஞானத்தைக் கைநழுவவிட்ட குற்றத்திற்காக உங்களை கட்டி வைத்து் அடித்தாலும் தப்பில்லை என்கிறது
#இந்தியா.
ஒரு பட்டாளம் முழுக்கவே ஐந்தறிவோடு இருப்பது இந்தியாவுக்கு நேரிடும் இன்னொரு பிரத்யேகமான கொடுமை!
– GNANABHARATHI CHINNASAMY