மார்க்ஸ் இருப்பது எது வரை?

மார்க்ஸ்

நீங்கள் உயிரோடு இருந்தபோது

ஊர் ஊராய் விரட்டப்பட்டீர்

நாடு நாடாய் துரத்தப்பட்டீர்

இன்று

ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும்

ஒரு பூகம்பத்தைப் போல தலைமறைவாகவும்

நீங்கள் நடந்து செல்லாத ஊரேது! நாடேது!!

 கவிஞர் இன்குலாப்

# # #

மனித உயிரினத்தில்

சுரண்டலும் ஆதிக்கமும் இருக்கும்வரை

இக்கொடுமைகளுக்கு ஆளாகும்

கடைசியொரு மனிதன் இருக்கும்வரை

கையில் ஏதோவொரு ஆயுதம் ஏந்தி

கலகம் செய்தபடி இருப்பான் கார்ல் மார்க்ஸ்!

– அமரகீதன்

(இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்)

 

Read previous post:
0a1t
“மாயமான மல்லையாவை பிடிச்சுட்டு வாங்கடானா, மாசமான டீச்சரை பிடிச்சுட்டு வந்திருக்காய்ங்கெ!”

கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியையையும், மாணவரையும் திருப்பூர் பகுதியில் போலீசார் மீட்டனர். ஆசிரியை தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இருவரும் ரகசிய திருமணம்

Close