வங்கி பெண் ஊழியரை “தேவாங்கு” என்று திட்டிய “இந்துத்துவ ஓநாய்”!

செந்தில்ராஜ் என்றொரு ஆசாமி, இந்துத்துவ எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, மிக மெதுவாக வேலை பார்க்கும் வங்கி பெண் ஊழியர் ஒருவரின் வீடியோவை (இது 2015, நவம்பர் 25ல் யுடியூபில் பதிவேற்றப்பட்டது) அனுப்பி, ஜெயமோகனின் கருத்தைக் கேட்டிருக்கிறார். அந்த வீடியோ:

https://youtu.be/30b5otbZAsE

இந்த வீடியோவை இப்போது பார்த்த “கருத்து கந்தசாமி” ஜெயமோகன், விஸ்வாமித்திரராகி, உழுவித்துண்ணும் வெள்ளாள ஆவேசத்துடன், வலைத்தளத்தில், அந்த வங்கி பெண் ஊழியரை “தேவாங்கு” என்று திட்டுகிறார். “கிழவி” என்று கரித்துக் கொட்டுகிறார். இதுதான் சாக்கென்று சோஷலிசத்தை வம்புக்கு இழுக்கிறார். ஜெயமோகனின் அந்த “பொங்கலின்” ஒரு பகுதி:-

“நியாயப்படி இந்தக் கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக் கொடுத்து அனுப்ப வேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும் போல.

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப் பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.

எனக்கு இரு தேசிய வங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிலும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!”.

ஜெயமோகனின் இந்த ஈனக்கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவற்றில் சில:

ஞாநி சங்கரன்: ஒரு வங்கி பெண் ஊழியரின் வீடியோவைப் போட்டு அநாகரிகமாக அது பற்றி ஒரு ‘எழுத்தாளன்” எழுதியிருப்பதைப பார்த்தேன். வக்கிரமும் வன்மமும்பொய்யும் புனைசுருட்டும் நிரம்பித்ததும்பும் மனதிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும் ? எழுத்தாற்றல் என்ற முகமூடி கிழிந்து போய் ரொம்ப நாளாச்சு.

Suresh kannan: மாலை இந்த வீடியோவைப் பார்த்தபோதே நினைத்தேன். இது நிச்சயம் தனிமனித உரிமை மீறல். அவருக்குத் தெரியாமல் எடுத்தது நிச்சயம் அராஜகம். வங்கி ஊழியர்களின் மெத்தனத்தை விமர்சிப்பது வேறு. ஜெயமோகனின் மொழி அதிர்ச்சியளிக்கிறது. என்னவாயிற்று அவருக்கு?

Sathish Kumar V: A guy named harshad ghodke has posted this. Her name is Premlata Shinde. She is retiring in Feb2017. So far she has survived a paralysis stroke and 2 heart atracks. She had just resumed her duties after a prolonged duration of leave for treatment. She has enough leaves stocked up that she can avail them and continue getting paid at home till her retirement. But she wants to finish her service period honorably. So her branch staff set up an extra cash counter just so she can work at her own pace while customers can continue getting the service at the usual counter. But some unaware customer ended up at that counter and made this video. Also, her husband is no more and her only son lives abroad with wife and child and can only visit for limited durations. It is said that she has undergone most of her medical treatment by herself. Hats off to all thr women of our nation who are striving and working hard making all our lives and our nation move ahead.
Stop spreading wrong messages..

0a1j

Kavitha Bharathy: தேவாங்கு அழகான பிராணி. ஒரு குழந்தை போன்று செல்லத் தோற்றம் கண்டது. யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதது. நரியைப் போலவோ, ஓநாயைப் போலவோ  அதன் கண்களில் சூழ்ச்சியை காண இயலாது. அதனிடம் காணக் கிடைப்பது ஆத்ம தரிசனம் சித்திக்கப் பெற்ற ஒரு கனிந்த சாந்தம்

தேவாங்குவை கேலிக்குரியதாக்குவது மனிதனின் ஆன்மீக வறட்சியின் அடையாளம்.

குறிப்பு: தேவாங்கு பாவம்! அதற்கு இலக்கியமும் தெரியாது! ஜெயமோகனையும் தெரியாது!

இனி நம் இலக்கிய மேல்சாந்தியின் வெண்முரசு சத்தத்தை கீழுள்ள சுட்டியைச் சொடுக்கிக் கேளுங்கள்..

http://www.jeyamohan.in/91768#.WBDBIoaXeEc

Amarageethan: வலைதளத்தில் ஜெயமோகனின் அந்த பக்கத்தை காணவில்லை. மாயமாகிவிட்டது. தன் இழிமனம் வெளிப்படுத்திய ஈனக்கருத்துக்கு எதிராக கிளம்பிய எதிர்வினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த பக்கத்தையே நீக்கியிருக்கிறது “இந்துத்துவ ஓநாய்”!

Rajan Kurai Krishnan: ஜெயமோகன், வங்கி ஊழியர் காணொளியை வெளியிட்டு தரக்குறைவாக எழுதியதற்காக பரவலாக கண்டிக்கப்படுவதும், அவரும் அந்த பதிவை நீக்கியிருப்பதும் ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால், இதுவரை என் கண்ணில் பட்டவரை யாரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கருத்தாக்கத்தை கவனித்ததாக தெரியவில்லை. ஜெயமோகன் குறிப்பின் கடைசி வார்த்தை – சோஷலிஸம்! சரி, ஒரு ஊழியர் மெதுவாகவே வேலை செய்வதாக வைத்துக்கொண்டாலும் அதற்கும் சோஷலிஸத்திற்கும் என்ன தொடர்பு? சோஷலிஸம் என்ற அரசியல் சித்தாந்தம் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதால், அவற்றின் செயல்பாட்டால் பணி உத்தரவாதம் கிடைப்பதால், யாரும் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று புரிந்துகொள்ள வேண்டுமா? பணியாளர்களை நினைத்த நேரத்தில் வேலையை வீட்டு நீக்கும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டால் எல்லாம் திறம்பட நடந்துவிடுமா? இவ்வாறான அனுமானங்களுக்கு தரவுகள் உள்ளனவா? இவ்வளவு மொண்ணையாக சிந்திப்பவர்தான் முக்கியமான எழுத்தாளராக கருதப்படுகிறார் என்பது குறித்த வியப்பு என்னை விட்டு நீங்குவதேயில்லை.