“அலைபேசியில் 16ஆம் நூற்றாண்டுக்கு பேச முடியுமா?”

மீறல்

○○○○

கடன் கேட்கப்போன என்னிடம்
வங்கி மேலாளர்
’அடமானம் வைக்கச்
சொத்தேதுமுண்டா’ என்றார்

‘இப்பரந்த ஆகாயமுண்டு’

மேலும் கீழும் பார்த்தவர்
‘ஜாமீன் போட ஆளுண்டா?’

‘ஓ..கடுவெளிச் சித்தருண்டே’
என்றேன்

‘அவருக்கு எம் வங்கியில்
கணக்குண்டா’ வினவினார்

கேட்க வேண்டுமென்றதும்
அலைபேசியைக் கொடுத்தார்

‘இதில் 16 ஆம் நூற்றாண்டுக்குப்
பேச முடியுமா’ என்றேன்

அதற்குச் சில வினாடிகளில்தான்
வாட்ச்மேன் என் கழுத்தில்
கை வைத்த

மனித உரிமை மீறல் நடந்தது

மாட்சிமை தங்கிய
நீதியரசர் அவர்களே!
#1year ago today

– கரிகாலன்