ட்ரீம் வீவர்ஸ் – ஹனி பீ மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தின் துவக்க விழா!

ட்ரீம் வீவர்ஸ் மற்றும் ஹனி பீ மூவிஸ்  இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் துவக்க விழா சென்னையில் விஜயதசமி அன்று நடைபெற்றது. இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்நிகழ்வை துவக்கி வைத்தனர்.

 இப்படத்தின் நாயகனாக வர்மா நடிக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கும் திரைப்படம் உட்பட மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜியும், இசையமைப்பாளராக தேவ் குருவும் பணியாற்ற உள்ளனர்.

கதாநாயகி, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் சென்னையில் துவங்க இருக்கும் இதன் படப்பிடிப்பு, கோயமுத்தூர், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்திலும் நடைபெற உள்ளது.

Read previous post:
g2
4G Tamil Movie Pooja Stills Gallery

Close